மக்களுக்கு தொண்டு செய்வதே இஸ்ரோவின் நோக்கம் - இஸ்ரோ தலைவர் சிவன்

Home

shadow

                       மக்களுக்கு தொண்டு செய்வதே இஸ்ரோவின் நோக்கம் என இஸ்ரோ  தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 16 -ஆம் தேதிக்குள் புதிய 3 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும்  எனவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருதாகவும் தெரிவித்தார். 


மேலும், மீனவர்கள் சர்வதேச எல்லையை தண்டாமல் இருக்க புதியதாக ஒரு ஆப் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், விண்ணிற்கு மனிதனை அனுப்புவதற்கான ஏற்படுகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். 


2022-ஆம் ஆண்டிற்குள் மூன்று மனிதர்களை 400  கிலோமீட்டர் தூரத்திற்கு விண்வெளியில் அனுப்புவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதகாவௌம் தெரிவித்தார். 


இஸ்ரோவின் திட்டங்கள் தேசத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பது தான் இஸ்ரோவின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :