மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய அளவிலான “கலாம் சாட்” வரும் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர்

Home

shadow

                            மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய அளவிலானகலாம் சாட்மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்தமைக்ரோசாட்-ஆர் இமேஜிங்ஆகிய 2 செயற்கைகோள்கள் வரும் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஒரு மாநிலத்துக்கு 3 மாணவர்கள் வீதம் 36 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சியளிக்க உள்ளதாக அவர் கூறினார். இதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் கோடை காலத்தில் தொடங்கப்படும் என்றார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து வரும் 24ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்டில் செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட இருப்பதாகவும், இதன் மூலம் மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய அளவிலானகலாம் சாட்மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்தமைக்ரோசாட்-ஆர் இமேஜிங்ஆகிய 2 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதில் மாணவர்கள் தயாரித்தகலாம் சாட்செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும், இஸ்ரோ தயாரித்தமைக்ரோசாட்-ஆர் இமேஜிங்செயற்கைகோள் பூமி கண்காணிப்புக்காகவும் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவற்கான ஏற்பாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது மிகப்பெரிய திட்டம் என்பதால் பல்வேறு விதமான தொழில்நுட்ப யுக்திகளை கையாள வேண்டி உள்ளதால் தாமதமாகி வருவதாகவும், வருகிற ஏப்ரல் மாதம் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்றும் சிவன் தெரிவித்தார். மேலும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பக்கூடிய ககன்யான் விண்கலம் 2021 டிசம்பர் மாதத்துக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒரே சமயத்தில் 3 விண்வெளி வீரர்களை விண்ணில் அனுப்பி அவர்களை 7 நாட்கள் வரை விண்ணில் தங்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :