மும்பை - டிசிஸ் நிறுவனம் சாதனை

Home

shadow


               பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மூலதன மதிப்பு 10 ஆயிரம் கோடி டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், 10 ஆயிரம் கோடி டாலர் பங்குச்சந்தை மூலதன மதிப்பை எட்டிய முதலாவது இந்திய நிறுவனம் என்ற சாதனையை, டிசிஎஸ் நிறுவனம் படைத்துள்ளது.

டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் வர்த்தக வருமானம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அபரிமித வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதனால் அப் பங்குகளின் விலை மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை வழங்குவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இதனையடுத்து அந்நிறுவனப் பங்குகளின் விலை கடந்த வார வர்த்தகத்தின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை மட்டுமே சுமார் 7 சதவீத விலையுயர்வைச் சந்தித்தன. இந்நிலையில் இன்று பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டும் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சில மணித்துளிகளிலேயே டிசிஎஸ் நிறுவனப் பங்கின் விலை சுமார் 4 சதவீதம் அதிகரித்தது. இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த விலை மதிப்பு, அதாவது பங்குச் சந்தை மூலதன மதிப்பு 6 லடசத்து 80 ஆயிரத்து 912 கோடியாக உயர்ந்தது. அமெரிக்க டாலர் மதிப்பில் இது 10 ஆயிரம் கோடி டாலர் ஆகும். இதன்மூலம் 10 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பங்குச் சந்தை மூலதன மதிப்பை எட்டிய முதலாவது இந்திய நிறுவனம் என்ற சாதனையை டிசிஎஸ் நிறுவனம் படைத்துள்ளது. ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பெரிய நிறுவனங்களை முந்திக்கொண்டு இந்தப் பெருமையை டிசிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :