மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 210மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

Home

shadow

                          மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 210மெகாவாட்  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இரண்டு பிரிவுகள் இயங்கிவரும் நிலையில், முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இரண்டாவது பிரிவில் உள்ள ஒரு அலகில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டு பின்னர், இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, மேட்டூர் அனல் மின்நிலையத்தின் முதல் பிரிவின் நான்காவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :