ரபேல் ஒப்பந்தம் ரத்து.

Home

shadow

3ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இஸ்ரேலின் ரபேல் ஏவுகணை ஒப்பந்தத்தினை இந்தியா ரத்து செய்துள்ளது.

 

          எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும், ரபேல் நிறுவனத்தின் ஸ்பைக் ஏவுகணைகள் உலகின் 26 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு துறைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும், இறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில் ரபேல் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட 3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான ஸ்பைக் ஏவுகணை ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளதாக, ரபேல்  நிறுவன செய்தித் தொடர்பாளர் இஷாய் டேவிட் தெரிவித்துள்ளார்.

        பலசுற்று பேச்சுவார்தைகளுக்கு பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும், நிலையில் ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாஹு, முதன்முறையாக இந்தியா வரவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :