ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்

Home

shadow

              ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குருஷேஸ்த்திரா தொடங்கி வைத்தார்.


ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குருஷேஸ்த்திரா தொடங்கி வைத்தார்


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே பொது மேலாளர் குருஷேஸ்த்திரா2018-19 நிதி ஆண்டில் தெற்கு ரயில்வே 4 ஆயிரத்து 434 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் பெற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 14 புள்ளி 94 சதவிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்மேலும், 422 மில்லியன் மக்கள் இரயிலில் பயணம் செய்துள்ளதாகவும், இரயில் சேவை கடந்த 2017-18 விட 3 புள்ளி 8 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தாமரபரணி மற்றும் மகா புஷ்கரம் காண 18 சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் குருஷேஸ்த்திரா தெரிவித்தார்தீபாவளி பண்டிகை முன்னிட்டு 42 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது குறித்து  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், தற்போது கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் தீபாவளி நெருக்கத்தில் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :