ரயில் 18 சேவையை வரும் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்

Home

shadow

             ரயில் 18 சேவையை வரும் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் 18 எனும் பெயரில் இன்ஜின் இல்லாத ரயில் இந்தியாவில் முதல் முறையாக தயாரிகப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு என்ஜின் தனியாக கிடையாது. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், ரயில் 18  சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :