ரஷ்யா – ஹைபர்சோனிக் ஏவுகணை

Home

shadow


ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று தாக்க கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து மிக்-31 ரக ஜெட் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.  கின்ழால் என அழைக்கப்படும் இந்த ஏவுகணை 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கக் கூடியது. ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய இந்த ஏவுகணை மூலம் தரை மற்றும் கடல் பரப்பில் இருக்கும் எந்த இலக்கையும் தாக்கி அழிக்க முடியும். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்த இந்த ஏவுகணை, மற்ற ஏவுகணைகளை கொண்டு எளிதில் தாக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :