வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் தடை செய்யப்படும்

Home

shadow

                  வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் தடை செய்யப்படும் என ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


தேர்தல் நடைபெறும் போது வாக்குப்பதிவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்கள் வழியாக அரசியல் கட்சியினர் வெளியிடும் அறிவிப்புகளால் தேர்தலில் குளறுபடிகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே சமூக வலைத்தளங்கள் வழியான பிரச்சாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்து என ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் தடை செய்யப்படும் என ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாக தெரிய வந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 3 மணி நேரத்திற்குள்ளாக புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சமூக வலைத்தள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான செய்திகள் :