வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கு இந்தியாவில் குழு அமைக்க திட்டம்

Home

shadow

               வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கு இந்தியாவை அடிப்படையாக கொண்டு குழு அமைக்கலாம் என வாட்ஸ் அப்நிறுவனம் மத்திய அரசுக்கு பதிலளித்துள்ளது.

 

இந்தியாவில் வாட்ஸ்-அப் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் 20 கோடி பேர் உள்ளனர். இவர்களில் சிலர், இந்த வலைதளத்தில் உள்ள வசதியைப் பயன்படுத்தி வதந்தி பரப்புவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.  குழந்தை கடத்தும் கும்பல், பசு கடத்தும் கும்பல் என வதந்திகள் பரவி நாடு முழுவதிலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 20-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு, வதந்திகள் பரவுவதை தடுக்காவிட்டால் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.  இதையடுத்து வாட்ஸ்-அப் நிறுவனம், மத்திய அரசுக்கு பதில் எழுதி உள்ளது. அதில், கற்பித்தல், விவாதித்தல் மூலமாக போலி செய்திகள் பரவுவதை தடுப்பதற்கு எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை வாட்ஸ் அப்தெளிவுபடுத்தி உள்ளதாகவும், போலி தகவல்கள், வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கு இந்தியாவை அடிப்படையாக கொண்டு குழு ஒன்றை அமைப்பதாகவும் வாட்ஸ் அப்’  நிறுவனம் தெரிவித்துள்ளதாக மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறவர்களை அடையாளம் கண்டு கூறுவதில் மத்திய அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற வகையில் வாட்ஸ் அப்நிறுவன நடவடிக்கை அமையவில்லை எனவும் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :