வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு

Home

shadow

           வன்முறையைத் தூண்டும் வகையில் பொறுப்பற்ற முறையில் பரப்பப்படும் வதந்தியான தகவல்களை நீக்கிவிட வேண்டும் என வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் என வாட்ஸ்-அப் மூலமாக பரவும் வதந்திகளால் நாடு முழுவதும் பல அப்பாவிகள் அடித்துக் கொலை செய்யப்படும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கடந்த இரு மாதங்களில் மட்டும் இதுபோன்ற வதந்தி தகவல்களால் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பொறுப்பற்ற மற்றும் வன்முறையைத் தூண்டும் செய்திகளை எடுத்துவிடுமாறு  வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  அஸாம், மராட்டியம், கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற துரதிஷ்டவசமான கொலைகள், மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளிடம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும், போலியான, உள்நோக்கம் கொண்ட மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளைப் பரப்புவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை வாட்ஸ்-அப் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :