விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் வராலாற்று சாதனை

Home

shadow

விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி வராலாற்று சாதனை படைத்துள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா அறிவித்துள்ளது.

ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டுபூமிக்கு அருகே உள்ள ர்யுகு (Rygu)  என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காகஹயபுஸா-2 என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜுன் மாதம் 27ம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது. இந்நிலையில்ஹயபுஸாவில் பொருத்தபட்டிருந்த மினர்வா-2 என்று  அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர், வின்கல் மீது கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக தரையிரக்கிக்கியதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது. விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிரக்கியது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் விண்கல் மீது முதல் முறையாக ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய நாடு எனும் வரலாற்று சாதனையை ஜப்பான் தனதாக்கி கொண்டது. விண்கல்லில் தரையிரங்கிய ரோவர்கள், அங்கு எடுத்த புகைப்படங்களை ஜாக்ஸா அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :