விண்வெளி உடை மற்றும் மாதிரி விண்கலம் போன்றவற்றை காட்சிக்கு வைத்துள்ளது இஸ்ரோ

Home

shadow

                         விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கு பயன்படுத்தப்பட உள்ள விண்வெளி உடை மற்றும் மாதிரி விண்கலம் போன்றவற்றை காட்சிக்கு வைத்துள்ளது.


இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளிக்கு முதல்முறையாக விண்வெளி வீரர்களை அனுப்பும் பணிக்குழு பற்றிய தகவல்களை பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்  தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரில் நடைபெற்ற 6-ஆவது  விண்வெளிக் கண்காட்சியின்போது அறிவித்தார். 


இந்தியா, வரும் 2022ஆம் ஆண்டுக்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ-வின் முக்கிய நோக்கம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய சாதனை பட்டியலில் நான்காவது உலக நாடாக இந்தியா இணைய வேண்டும் என்பது தான்.  


இந்நிலையில்2022 ஆம் ஆண்டில் இந்திய விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக இஸ்ரோ இரண்டு உடைகளை  உருவாக்கியுள்ளது. 


விண்வெளியில் இருந்து  வருவதற்கு உரிய கேப்சூல் மாதிரியை இஸ்ரோ ஏற்கனவே சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இது தொடர்பான செய்திகள் :