விண்வெளி பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் - அமெரிக்க அரசு

Home

shadow

                விண்வெளி பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.


விண்ணில் உள்ள இந்திய செயற்கை கோள்அலை பாதுகாக்கும் பொருட்டும் இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பு உறுதி செய்யும் விதமாகவும், செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இது குறித்து நாட்டு மக்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, விண்வெளி துறையில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து அமெரிக்க உள்துறை, மிஷன் சக்தி குறித்த இந்திய பிரதமரின் உரையை கண்டதாகவும், இந்தியாவுடனான உறுதியான பாதுகாப்பு உறவின் ஒரு பகுதியாக விண்வெளி பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் எனவும், விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இந்தியாவிற்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், விண்வெளியில் சேரும் குப்பைகள் குறித்து அமெரிக்கா கவலைக் கொண்டுள்ளதாகவும், இந்தியாவின் சோதனை அதனை கருத்தில் கொண்டே நடத்தப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ளதை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :