விண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா

Home

shadow

                         மிஷன் சக்தி திட்ட சோதனையால் விண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணையை கடந்த மாத இறுதியில் இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்ற இந்த சோதனை தொடர்பாக பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மிஷன் சக்தி திட்ட சோதனையால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியில் பல்வேறு நாடுகளின் சார்பில் அனுப்பட்ட பல நூறு செயற்கைகோள்கள் செயலிழந்து அங்கேயே குப்பைகளாக சேர்ந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியா நடத்திய மிஷன் சக்தி சோதனையின் போது, செயல்பாட்டில் இருந்த செயற்கை கோள் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சோதனையின் காரணமாக விண்வெளியில் செயற்கை கோள்களின் பாகங்கள் 400-க்கும் மேற்பட்ட பாகங்களாக உடைந்து சிதறி உள்ளதாகவும், இதில் சில 10 செண்டி மீட்டரை விட நீளமாக இருப்பதாகவும், இந்த குப்பைகளால் சரவ்தேச விண்வெளி நிலையத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளதுமுன்னதாக இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :