விமானப்படை தகவல் தொடர்புக்காக வருகிற 19 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது ஜிசாட்-7 ஏ செயற்கைகோள்

Home

shadow

                விமானப்படை தகவல் தொடர்புக்காக ஜிசாட்-7 ஏ என்ற செயற்கைகோள் வருகிற 19 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளானர்.


இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-7ஏ செயற்கைகோளை இஸ்ரோ வருகிற 19 ஆம் தேதி  விண்ணில் ஏவுவதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில்

இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 2 ஆயிரத்து 250 கிலோ எடையில் ஜிசாட்-7 ஏ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்தாகவும் இதனை அடுத்த வாரம் ஜி.எஸ்.எல்.வி- எப் 11 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்தாகவும் தெரிவித்தனர். ஜிசாட்-7 ஏ செயற்கைகோளில் 3 புள்ளி 3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள இந்திய விமானப்படைக்கான ரேடார் நிலையங்களை இந்த செயற்கைகோள் மூலம் இணைக்க முடியும். ஜிசாட்-7 ஏ செயற்கைகோள் விமானப்படையின் போர்த்திறன்களை அதிகரிப்பதுடன், உலகளாவிய நடவடிக்கைகளையும் அதிகளவில் தெரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். 2013-ம் ஆண்டு ஜிசாட்-7 என்ற செயற்கைகோள் கடற்படைக்காக தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2 வது முறையாக ஜிசாட்-7செயற்கைகோளை தயாரித்து விமானப்படைக்காக அர்ப்பணிக்க இருக்கிறது..

இது தொடர்பான செய்திகள் :