விரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை!

Home

shadow

           விரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை! 

          டிக் டாக் மற்றும் ஹலோ போன்ற செயலிகளை விரைவில் தடைசெய்ய போவதாக மத்திய அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது. 

ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச் அமைப்பு பிரதமருக்கு டிக் டாக் போன்ற செயலிகள் தேச விரோத நடவடிக்கைகளுக்கு  பயன்படுவதாக புகார் அனுப்பியது. 
இந்நிலையில் டிக் டாக், ஹலோ ஆகிய செயலி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்  21 விதமான கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பியுள்ளது , மேலும் அந்த கேள்விகளுக்கு 22-ம் தேதிக்குள் உரிய பதில் அளிக்காவிட்டால் டிக் டாக் மற்றும் ஹலோ போன்ற செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :