வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரோ தயாரித்த ஜிசாட்-11 செயற்கைக்கோள்

Home

shadow

                               இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தயாரித்த ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிசாட்-11 இந்திய தொலைத் தொடர்பு துறையில் புதிய மைக் கல்லாக இருக்கும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய இணையதள சேவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இஸ்ரோவின் தயாரிப்பான ஜிசாட்-11 செயற்கைக்கோளில்  40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன்.  இந்த ஜிசாட் -11 செயற்கைக்கோள்மூலம் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் இணைய சேவை விரைவாகவும் எளிமையாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது. 5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்தியாவிலிருந்து அனுப்ப இயலாது என்பதால் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக ஜிசாட்-11   கடந்த மே மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் ஜிசாட்-6 ஏ செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதால்  ஜிசாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து இன்று அதிகாலை 3.23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தொலைதொடர்ப்பு துறையில் இது ஒரு முக்கிய மையில் கல்லாக இருக்கும் என பெருமிதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிராம புறங்களை எளிதாக இணைக்க முடியும் எனவும், இந்திய விஞ்ஞானிகளின் இத்தகைய படைப்புகள் ஒவ்வொரு இந்தியரையும் ஊக்கப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பான செய்திகள் :