ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து மைக்ரோசாட்-ஆர்,
கலாம்
சாட் ஆகிய
2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44
ராக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்
தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது
ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44
ராக்கெட்
நேற்று இரவு சரியாக 11 மணி
37 நிமிடத்தில் விண்ணில் ஏவப்பட்டது. இந்த
ராக்கெட் 690 கிலோ எடைகொண்ட
மைக்ரோசாட்-ஆர் மற்றும்
34 கிராம் எடை கொண்ட கலாம் சாட் ஆகிய செயற்கை
கோள்களுடன் விண்ணில் பாய்கிறது. பூமியில்
இருந்து 274 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்’
செயற்கை
கோளும், 450 கிலோ மீட்டர்
தூரத்தில் ‘கலாம் சாட்’
செயற்கை
கோளும் நிலைநிறுத்தப்படுகிறது.‘மைக்ரோசாட்-ஆர்’
செயற்கை
கோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம்
சாட்’ செயற்கை கோள் ஹாம் ரேடியோ
சேவைக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி.
ராக்கெட்டுகள்
மூலம் கடந்த 25 ஆண்டுகளில்
53 இந்திய செயற்கை கோள்களையும்,
269 வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
பி.எஸ்.எல்.வி.-சி.44
ராக்கெட்டானது
இஸ்ரோ நிறுவனத்தின் பி.எஸ்.எல்.வி.
ரகத்தின்
46-வது ராக்கெட் ஆகும்.செயற்கை
கோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் வகையிலான பி.எஸ்.எல்.வி.-டி.எல்.
என்ற
புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44
ராக்கெட்டில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்
நேற்றிரவு 2 செயற்கைக்கோள்களுடன்
விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி.44
ராக்கெட்
செயற்கைக்கோள்கள் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது குறித்து பேசிய இஸ்ரோ
தலைவர் சிவன், உலகிலேயே மிகவும் இலகுரக
செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்,
அறிவியல்
தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல மாணவர்களுக்கு தனது
வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.