285 கோடி மதிப்பீட்டில் அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் - ஆணையர் ஜவஹர்

Home

shadow

 

       285 கோடி மதிப்பீட்டில் அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.


      ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த அரசுப் பணியாளார்களுக்கான திறனூட்டல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர், ஜவஹர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவஹர்,      தமிழ்நாடு அரசினுடைய ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் ஒரு லட்சம் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இத்திட்டத்தின்  மூலமாக சுமார் ஒன்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினி மயமாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தினால் பணிப்பதிவேடுகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்து செல்லும் போது ஏற்படும் கால விரயம் குறைவதுடன், காணாமல் போகும் சூழல், விபத்துகளால் பாதிப்பு போன்றவை தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இத்திட்டம் நவம்பர் முதல் தேதியிலிருந்து தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, மாவட்ட ஆட்சித் தலைவார் இராசாமணி, மாநகர காவல் ஆணையார் அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இது தொடர்பான செய்திகள் :