31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி - சி 43 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது

Home

shadow

                       இஸ்ரோ உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி - சி 43 ராக்கெட் நாளை  விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் அமைந்துள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான கவுன்ட் டவுன் இன்று மாலை தொடங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமான ராக்கெட்டுகளைக் காட்டிலும் எடை குறைவாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அதி நவீன பி.எஸ்.எல்.வி. சி-43 மூலம், 8 நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதனுடன் புவி வெளிப்பரப்பை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சுமார் 380 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும். புவி வட்டப் பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கை கோளை நிலை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பிற செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளன. பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தத்தின் கீழ் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :