5 ஜி - தொலைத் தொடர்புத்துறை

Home

shadow


     வரும் ஜூன் மாதத்துக்குள் இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ப தயார் நிலையில் உள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலர் அருணா சுந்தரராஜன் கூறினார்.

டெல்லியில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தொலைத் தொடர்புத்ஐற செயலர் அருணா சுந்தர்ராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர்இந்தியா மின்னணு தொழில்நுட்ப புரட்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். அதை வேகப்படுத்துவதில் 5ஜி தொழில்நுட்பம் மிக முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் 5 ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான முனைப்புகளில் அரசு தீவிரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அனைத்து தொலைத் தொடர்பு துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் அரசு ஆலோசித்துள்ளதாகவும் அவர்கள்தான் 5 ஜி சேவையின் முன்னோடிகளாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். துறை வல்லுநர்கள், ஐஐடி மற்றும் ஐஐஎஸ் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் கொண்ட உயர்மட்ட குழு, 5ஜி சேவைக்கான கட்டணம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து செயல்திட்டத்தினை உருவாக்கியுள்ளதாக கூறிய அருணா சுந்தர்ராஜன், அதனை வரும் ஜூன் மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப இந்தியா தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :