மருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்

Home

shadow


உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 2-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பட்டம் பெற்ற மருத்துவ மாணவர்கள் கிராமப் பகுதிகளில் தகுந்த சுகாதாரச் சேவைகள் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களுக்காக சேவையாற்றுவதில் தங்களது திறமை மற்றும் அறிவை செலவிட வேண்டும் என்று கூறினார்.

 சமூகத்தில் இருக்கும் எளிய மக்களுக்கும் சுகாதாரச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை. அதனை மருத்துவ மாணவர்கள் பின்பற்றவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார்.இது தொடர்பான செய்திகள் :