தஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்

Home

shadow


தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பெரியநாயகி கோவிலில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை திருவிழா, துவஜாரோகணம் என்னும் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. பெரிய கோவிலில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், நந்தி மண்டபத்திற்கு முன்புள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில், நாள்தோறும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், பரத நாட்டியக் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பான செய்திகள் :