திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா

Home

shadow


திருச்சி அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில்   திருச்சி சரக டிஜஜி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு,  மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். 
அப்போது பேசிய அவர், எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்றும், தனித்துவம் மற்றும் கற்பனை திறனை வளர்த்துக் கொண்டால் புதிய படைப்புகளை உருவாக்கி பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என்றும் அவர் கூறினார். 

பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :