ஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது

Home

shadow

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது.

‘மௌன குரு’ படத்துக்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது மகாமுனி திரைப்படம். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மகாமுனி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஆர்யா கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஆர்யா. இந்நிலையில் மகாமுனி படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.






இது தொடர்பான செய்திகள் :