நேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்

Home

shadow

 நேர்கொண்ட பார்வை  படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் 

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கும் - அஜித்துக்கும் இடையேயான ரொமாண்டிக் காட்சியை படத்தின் விளம்பரத்துக்காக வெளியிட்டுள்ளார் நடிகை வித்யாபாலன். 20 வினாடிகள் நீளம் கொண்ட அந்த வீடியோவில், “சீக்கிரமா வீட்டுக்கு வர்ரேன்னு எனக்கு பண்ண பிராமிஸ் ஞாபகமிருக்கா, அதென்ன பொண்டாட்டிக்கு பண்ற பிராமிஸ்ஸ யாருமே மதிக்கிறதில்ல. பதில் சொல்லுங்க வக்கீல் சார்” என்று ரொமாண்டிக்காக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புரமோஷன் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த வித்யாபாலன், அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் என் முன்னால் மிகவும் எளிமையாக நடந்து கொண்டிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் நடிப்பது அஜித்துடன் தானா? அல்லது அஜித மாதிரியான ஒரு ஆளுடனா என்ற சந்தேகம் கூட வந்தது. அஜித் அந்த அளவுக்கு எளிமையானவர். அவருடைய தல இமேஜ் குறித்தும், அவரின் எளிமை குறித்தும் நான் அஜித்துடன் பேசினேன். அவர் அப்போது வெட்கப்பட்டார்” என்று கூறியிருந்தார்.இது தொடர்பான செய்திகள் :