பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…

Home

shadow

 

கலைகளுள் பல வகை உண்டு. அவற்றுள் நடிப்பும் ஒன்று. அந்த நடிப்பில் பலவகை உண்டு. அதில் மிகக் கடினமானது நகைச்சுவை. ஒருவரை எளிதாக அழ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது மிகவும் சிரமம். தேர்ந்த நடிகர்களுக்கே அது கைவரப் பெறும். அவ்வாறான அரிய நடிகர்களுள் ஒருவர்தாம் மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். நாகேஷின் பிறந்த தினம் இன்று. நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். இவர் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தார். உலகில் 1000 திரைப்படங்களில் நடித்த அபூர்வ நடிகர். சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு சிரமங்களுடன் நாகேஷின் கலையுலகப் பயணம் தொடங்கியது.   சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்து சினிமா வாய்ப்புகளைத் தேடினார் நாகேஷ். சினிமாவுக்கு வருவதற்கு முன் சிறிது காலம் யில்வேயில் பணியாற்றினாலும் சினிமா இருந்த ஆர்வம் காரணமாக நாடகத்தில் நடித்து வந்தார். பிழைப்புக்காக அவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார். இதன் காரணமாகவே சர்வம் சுந்தரம் படத்தில் அனுபவித்து நடித்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் எதிர் நீச்சல். கருப்பு வெள்ளை பட காலத்திலிருந்து வண்ணப் படங்கள் வரையிலான நாகேஷின் திரையுலகப் பங்களிப்பு அளப்பரியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., டி.எஸ்.பாலையா, ரெங்காராவ், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஜாம்பவான் நடிகர்களுடன் மட்டுமல்லாமல் இளைய தலைமுறையின் முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு உள்ளிட்டோருடனும் இணைந்து நடித்தவர். எத்தனை பேருடன் நடித்தாலும் தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றி தனித்துவத்துடன் விளங்கியவர்.  ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் மிகச் சிறந்த நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவில், பின்னர் படிக்காதவன் படத்தில் ரஜினியின் வளர்ப்புத் தந்தையாக நடித்து  பார்ப்பவர்களை நெகிழவைத்தவர்  நாகேஷ்.  கமல்ஹாசனுடன் கடல் மீன்கள் முதல் மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர்தசாவதாரம் வரை பயணித்தவர். மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக நடித்த ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் அடிக்கடி குறிப்பிடுவார்.  நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷுக்கு கிடைத்தது. நாகேஷின் முகபாவனைகள், உடல்மொழிகள், அவரின் டயலாக் டெலிவரி என சகலமும் ஒன்றுசேர, தனி ராஜபாட்டை நடத்தியிருப்பதில் அவருக்கு நிகர் நாகேஷ் நிகரானவர் என்று கூறலாம். அப்படிப்பட்ட நடிகர் நாகேஷின் பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூர்ந்து போற்றுவோம்….

இது தொடர்பான செய்திகள் :