அஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு

Home

shadow

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள படக்குழு தொடர்ச்சியாக பாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் - வித்யாபாலன் காம்போவில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


இது தொடர்பான செய்திகள் :