அதே தேதியில் 'சாமி ஸ்கொயர்'  ரிலீஸ்.

Home

shadow

ஹரி இயக்கத்தில் 15 வருடங்களுக்கு முன் விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாசராவ், விஜயகுமார், மனோரமா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி  பெற்ற படம் தான் ‘சாமி’ .

         இயக்குனர் ஹரி மீண்டும் சாமி இரண்டாம் பக்கத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'சாமி ஸ்கொயர்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் , பாபி சிம்ஹா, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கின்றனர். 50 சதவிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.'சாமி ஸ்கொயர்'  படம் ஜூன் மாதம் ரம்ஜானுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.

          ஆனால் சாமி முதல் பாகம் மே 1,2003 யில் வெளியானதால் இரண்டாம் பாகத்தையும் வரும் மே 1 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு பின் வெளியாகும் சாமி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த  எதிர்பார்ப்பு உள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :