ஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு

Home

shadow

ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கஜினிகாந்த். ஆர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வந்தார். இதனையடுத்து  சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சாந்த குமார் இயக்கத்தில் மகாமுனி என்ற படத்திலும் ஆர்யா நடித்து வந்தார். இரண்டு படங்களையும்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மகா முனி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ஆர்யா கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை 10.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 மௌனகுரு என்னும் மிகப்பெரிய வெற்றிப் படத்துக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மகிமா நம்பியார்,  ஜூனியர் பாலையா, காளிவெங்கட்  உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

மௌனகுரு படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இரண்டாவது படமான கிரைம் திரில்லர்  படத்தை சாந்தகுமார் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான செய்திகள் :