ஆஸ்கர் விருது திருட்டு

Home

shadow


சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை பிரான்செஸ் மெக்டார்மென்ட்டின் ஆஸ்கர் விருது திருடப்பட்டது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செஸீஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகை பிரான்செஸ் மெக்டோர்மென்ட் இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். விருது நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற விருந்தில்  பிரான்செஸ் கலந்து கொண்டபோது அவரது விருது திருடு போயுள்ளது. டெர்ரி பிரையன்ட் எனும் நபர்  பிரான்செஸ்ஸின் விருதை திருடிச் செல்வதை அங்கிருந்த புகைப்படக்காரர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் டெர்ரியை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ஆஸ்கர் விருதை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான செய்திகள் :