ஆஸ்கர் விருதுகள்

Home

shadow


மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த டெல் டோரோ இயக்கிய ஷேப் ­ஃப் வாட்டர்திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர்  நோலனின்டன்கிர்க்திரைப்படம்  3 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில், இந்தியத் திரையுலக நட்சத்திரங்கள் ஸ்ரீதேவி, சசிகபூர் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திரைப்படத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும், அமெரிக்காவின் ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. அதன்படி, 90-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில், குல்லர்மோ டெல் டோரோ இயக்கிய ஷேப் ­ஃப் வாட்டர்திரைப்படம் 13 பிரிவுகளின் கீழும், மார்ட்டின் மெக்டெனா இயக்கியத்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசௌரிதிரைப்படம் 7 பிரிவுகளின் கீழும், பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின்டன்கிர்க்திரைப்படம் 8 பிரிவுகளின் கீழும் \ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் ஷேப் ஆஃப் வாட்டர்சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த கலை இயக்கம் ஆகியவற்றுக்காக நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை இயக்கிய குல்லர்மோ டெல் டோரோ சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். “டார்க்கெஸ்ட் அவர்படத்தில் நடித்த பிரபல பிரிட்டிஷ் நடிகர் கேரி ஓல்டுமேன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் ,“த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசௌரிபடத்தில் நடித்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்ஸெஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் வென்றனர். இரண்டாம் உலகப் போர் பற்றிய உண்மை நிகழ்வுகளை மிகவும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியடன்கிர்க்திரைப்படம் சிறந்த ஒலித் தொகுப்பு, ஒலிக்கலவை மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றுக்காக 3 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை பிளேட் ரன்னர் 2049 என்ற படத்துக்காக ரோஜர் டிக்கின்ஸ் பெற்றார். இதுவரை 14 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஜர் டிக்கின்ஸ் முதல்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருதைகெட் அவுட்படத்துக்காக ஜோர்டன் பீலேவும், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதுகால் மி பை யுவர் நேம்படத்துக்காக ஜேம்ஸ் ஐவரிக்கும் வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர்கள், அமெரிக்காவுக்கு கவலை அளிக்கும் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆரஞ்சு நிற கோட் அணிந்து வந்திருந்தது  குறிப்பிடத்தக்கது. முன்னதாக, விழாவின் தொடக்கத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவி, நடிகர் சசி கபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :