ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படம் - அஸாம் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை

Home

shadow

               ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அஸாம் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

   

உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. 



அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்



அந்த வகையில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. 


ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வேற்று மொழிக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். 



அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வேற்று மொழி படத்துக்கான பட்டியலில் அஸாமிய திரைப்படமான `வில்லேஜ் ராக்ஸ்டார்' படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. 



ரீமா தாஸ் இயக்கிய இத்திரைப்படம் ஏற்கெனவே இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :