உலகில் அதிக பணம் ஈட்டும் 100 பிரபலங்கள்

Home

shadow

உலகில் அதிக பணம் ஈட்டும் 100 பிரபலங்கள்

போர்பஸ் பத்திரிக்கை வருடா வருடம் உலகில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களை பட்டியலிட்டு வெளியிடும். 2018 ஆம் ஆண்டின் பிரபலங்களின் பட்டியலை போர்பஸ் நிறுவனம் வெளியிடுள்ளது.சர்வதேச அளவில் 2017-2018  ஆண்டுகளில் பிரபலங்களின் வருமானத்தை வைத்து இப்பட்டியல் வெளிவரும்.இதில் பிரபல குத்துசண்டை வீரர் பிளாய்டு மேவெதர் முதல் இடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் ஒசன்ஸ் பட புகழ் ஜார்ஜ் குளூனி உள்ளார். கைல் ஜென்னர் அடுத்த இடம் பிடித்துள்ளார்.இப்பட்டியலில் இந்தியாவிலிருந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 76-ஆவது இடம் பிடித்துள்ளார்.இவரின் ஆண்டு வருமானம் 4.05 கோடி டாலராகும்.இவர் படங்கள் மட்டுமின்றி இருபதுக்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்து வருமானம் ஈட்டி வருகிறார். அக்ஷய்க்கு அடுத்தப்படியாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் 82-ஆவது  இடம் பிடித்துள்ளார்.நடிகர் சல்மான்கானின் ஆண்டு வருமானம்  3.77  கோடி டாலராகும்.இப்படியலில் ரஸ்லிங்க் வீரர் ராக் ,விளையாட்டு வீரர் லயோனல் மெஸ்ஸி அடங்குவர். 

இது தொடர்பான செய்திகள் :