கடத்தல் கும்பலுக்கு உதவும் வளர்ப்பு கிளி

Home

shadow

பிரேசில் நாடு போதை பொருள்களுக்கு பெயர் போன நாடு. பல நாடுகளுக்கும் இங்கு இருந்து போதை பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரேசில் போலீசார் கடத்தல் கும்பலைக் கட்டுப்படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். போலீசார் கண்களில் கடத்தல் கும்பல் மண்ணைlத் தூவும் விதமான ஒரு செயல் பிரேசில் நாட்டில் நடைபெற்றிருக்கிறது. கடத்தல் கும்பல் பற்றிய செய்தி கிடைத்து போலீசார் கும்பலை கைது செய்ய விரைந்தனர். போலீசார் கடத்தல் கும்பல் இருக்கும் இடத்தை நெருங்கும் போதே கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பறந்து விட்டனர்.  இதைப் பற்றி விசாரணை செய்த போலீசார் கடத்தல் கும்பல் வளர்த்த கிளியை கைது செய்துள்ளனர். கடத்தல் கும்பல் கிளிக்கு போலீசார் வந்தால் "மாமா போலீஸ்" என்று கூற கற்றுக்கொடுத்து வளர்த்து வந்துள்ளனர். கிளியை கைது செய்த போலீசார் கிளியை பிரேசில் நாட்டு பூங்காவில் ஒப்படைத்தனர் 

இது தொடர்பான செய்திகள் :