கொடைக்கானல் - ஜிகரண்டா பூக்கள்

Home

shadow

கொடைக்கானலில் கோடை காலத்தை வரவேற்கும் விதமாக சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஜிகரண்டா  பூக்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை விரைவில் துவங்க உள்ளதால் மக்கள், குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் கோடை காலத்தை வரவேற்கும் விதமாக ஜிகரண்டா பூக்கள் சாலையோரங்களில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன.  கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு மற்றும் பழனி  செல்லக்கூடிய சாலை ஓரங்களில் இளநீல ஊதா  நிறத்தில் பூத்திருக்கும் ஜிகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. வாகனங்களை சாலையோரம் நிறுத்தி பூக்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், அங்கு புகைப்படும் எடுத்தும் மகிழ்கின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :