கோவில்பட்டி சாதனை பெண்

Home

shadow


பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் கல்லூரி மாணவி, தலை முடியினால் மினி வேனை இழுத்து அசத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் செல்வஜோதிமீனா. இவர் நேற்று தனது தலைமுடியினால் மினிவேனை இழுத்து சாதனை படைத்தார். கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியின் போது, மாணவி ஜோதிமீனா, ஒரு டன் எடையுள்ள மினிவேனை தலைமுடியில் கட்டி சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றார். பெண்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், பெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருக்கவும், தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வலியுறுத்தி இந்த சாதனையை மேற்கொண்டதாக மாணவி ஜோதிமீனா தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :