சமந்தா நடனத்தில் அனிருத் இசையில் வைரலாகி வரும் கர்மா வீடியோ

Home

shadow

கன்னட மொழியில் 2016ம் ஆண்டு வெளியாகி  அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த  படம் ‘யு டர்ன்’. தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு  அதில்  நடிகை சமந்தா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

 சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி  ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய பவன்குமாரே தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் #UTurnKarmaTheme பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சமந்தா. அனிருத் பாடியுள்ள இப்பாடல் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான செய்திகள் :