சவுதி அரேபியாவில் திரைப்படம்

Home

shadow

 

சவுதி அரேபியாவில் புதிய திரையரங்குகளை திறப்பதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சுமார் 37 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அந்நாட்டில் பொதுவெளியில் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் 1980-ஆம் ஆண்டு திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திரையரங்குகளில் திரைப்படங்கள் பார்க்க சவுதி மக்கள் துபாய், பக்ரைன் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சவுதியின் புதிய இளவரசராக பொறுப்பேற்றுக் கொண்ட முகமது பின் சல்மான், அந்நாட்டில் திரையரங்குகளை திறக்க சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். தலைநகர் ரியாத்தில் நேற்று புதிய திரையரங்குகளை திறப்பதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. முக்கிய அதிகாரிகள் மற்றும் அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அமெரிக்காவை சேர்ந்த ஏ.எம்.சி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், பிளாக் பாந்தர் ஆங்கில திரைப்படம் திரையிடப்பட்டது. சோதனை ஓட்டத்தை தொடர்ந்து விரைவில் நாடு முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.  திரையரங்களை அமைப்பதற்கான உரிமத்தை ஏ.எம்.சி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 15 நகரங்களில் 40 திரையரங்குகளை திறக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :