பாகுபலி வெற்றியை தொடர்ந்து
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமாகி இருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் கருத்து
வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து சமீபத்தில் விலகினர். இதையடுத்து இந்த படத்திற்கு
இசையமைக்க வேறு இசையமைப்பாளர்களை படக்குழு தேடி வந்தது.
இந்த நிலையில், படத்திற்கு
ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையை மட்டும்
ஜிப்ரான் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்களுக்கு வேறு சில இசையமைப்பாளர்களுடன்
பேச்சுவார்த்தை நடக்கிறது.
சுஜீத் இயக்கும் இந்த
படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய்,
ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து
பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு
ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவி கிரியேஷன்ஸ் சார்பில்
வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில்
வெளியாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில்
நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.