சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற கிரீன் புக் திரைப்படம்

Home

shadow

                ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் பீரியட்ஸ் ஆவண குறும்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.


91-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது, Period. End Of Sentence எனும் படத்திற்கு கிடைத்துள்ளது. மாதவிடாய் காலங்களில் இந்திய பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்னைகள், கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கின் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதை அதன் இயக்குனர் ராய்கா மற்றும் தயாரிப்பாளர் மெலிசா ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். சிறந்த படத்திற்கான விருதை கிரீன் புக் என்ற படம் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகராக போகிமியான் ராஃப்சோடி படத்தில் நடித்த ரமி மாலக்கும் , சிறந்த நடிகையாக த ஃபேவரைட் படத்தில் நடித்த ஒலிவியா கோல்மேன்னும் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர். சிறந்த இயக்குனருக்கான விருதை ரோமா படத்தை இயக்கிய அல்போன்சோ குவாரோன் பெற்றார். சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை மெக்ஸிகோவின் ரோமா படமும், சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை  ஸ்பைடர் மேன் - இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ் படமும் பெற்றன.

இது தொடர்பான செய்திகள் :