சீனா சுற்றுலா

Home

shadow

  

     சீனா நாட்டில் உள்ள ஹோங்சோ  நகரம் சுற்றுலாப்பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

கிழக்கு சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோங்சோ  நகரம் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். சீனாவிலுள்ள மிக அழகான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நகர் முழுவதும் இயற்கை அழகுகள் நிறைந்துள்ளன. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல அருங்காட்சியகங்கள் இங்கே உள்ளனஅறிவியல் தொழில்நுட்பத்திலும் இந்நகர் சிறந்து விளங்குகிறது. ஏராளமான பல்கலைக்கழகங்கள் இங்கு உள்ளன. இந்நகரிலுள்ள 'மேற்கு ஏரி'யை உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரந்து வருகிறது. தேயிலைத் தோட்டங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. அவையும், சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. 2022-ல் இந்நகரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :