செக்க சிவந்த வானம் படத்தில் நட்சத்திர பட்டாளம்

Home

shadow

காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்க சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜய் சேதுபதி போலீசாகவும் , சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த் சாமி அரசியல்வாதியாகவும், அருண்விஜய் ஒரு கோவக்கார இளைஞராகவும் நடிப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. இந்த படத்தில் 4  பேரும் சகோதரர்களாக நடிப்பதாகவும் தகவல். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலையில் ஏற்படும் மாசு மற்றும் கழிவு, அதனால் ஏற்படும் பிரச்சனை பற்றி அலசும் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. அதன் காரணமாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரின் பின்னணியில் தொழிற்சாலை போன்ற படம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் முக்கிய முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அங்கமாலி டைரீஸ், வெளிப்பாடிண்டே புஸ்தகம் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சரத் இந்த படத்தில் ஒரு திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைக்கிறார். 

இது தொடர்பான செய்திகள் :