ஜப்பான் - செர்ரி மலர் கண்காட்சி

Home

shadow


     ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்யோவில் தொடங்கியுள்ள, செர்ரி மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.

ஜப்பானின் தலைநகரான டோக்யோவில், வெள்ளை மற்றும் ரோஸ் நிறத்திலான செர்ரி மலர்கள் பூத்து குலுங்கும் காட்சி, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த செர்ரி மலர்களை காண பல நாடுகளைச் சேர்ந்த, ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஜப்பானியர்களால் அரோமியா பங்கி என அழைக்கப்படும் வண்டினங்கள்பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்களையும் அதன் பூக்களையும் கடித்து சேதப்படுத்தி வருகின்றன. சீனா, கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வண்டினங்கள், 2012ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மத்திய பகுதிகளில் கண்டறியப்பட்டன. 3 செ.மீ முதல் 4 செ.மீ வரை வளரக்கூடிய இந்த வண்டுகளின் ஊடுருவல் ஒரு மரத்தையே அழிக்கும் அளவிற்கு வீரியம் கொண்டது என்றும், இவற்றின் தாக்குதல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் செர்ரி மரங்களே இல்லாத நிலை ஜப்பானில் ஏற்படக்கூடும் எனவும் அந்நாட்டு சுற்றுசூழல் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பளித்து இந்த வண்டுகளிளின் ஊடுருவலை நிரந்தரமாக அழிக்க உதவ வேண்டும் என அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :