டெல்லியில் பத்மஸ்ரீ விருதுகள்

Home

shadow


     தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பத்ம விருதுகளை வழங்கினார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மவிருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண் 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு பத்மவிருதுகள் வழங்கப்படும் என கடந்த ஜனவரி 25ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலருக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி பத்ம விருதுகளை முதற்கட்டமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்நிலையில் இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில்  தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி, கிரிக்கெட் வீரர் தோனி, பிலியட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்டோருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். 

இது தொடர்பான செய்திகள் :