தாஜ்மஹால் பார்வை நேரம்

Home

shadow

 

 

     உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிட சுற்று பயணிகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

முகலாய கட்டிட கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தாஜ்மஹாலை தினம்தோறும் ஆயிரக்கணகான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாஜ்மஹாலை பார்வையிட வருகை தருகின்றனர். இந்த நிலையில் தற்போது தாஜ்மஹாலை பார்வையிட ஒரு நபருக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த காலவரம்பு முறை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் நேரம் இருக்க விரும்புபவர்கள் அதற்கு ஏற்ற தொகையை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு துறை கூறியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :