திரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்

Home

shadow


     வேலைக்காரன் படத்தின் இருவரும் நடித்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பொன்ராம் இயக்கத்தில் வெளிவர உள்ள சீமராஜாபடத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு நயன்தாராவை ஜோடியாக ஒப்பந்தம் செய்ய தீவிரமான முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது.

     எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்துள்ளன. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்த போராட்ட நாட்களை முழுமையான கதை உருவாக்கும் பணிக்கு ஒதுக்கிக்கொண்டு அப்பணியை முடித்திருக்கிறார், இயக்குநர் ராஜேஷ். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தன. அதனை எம்.ராஜேஷ் மறுத்தார். தற்போது நயன்தாரா நடிப்பது உறுதி என்று பேசப்படுகிறது. ஏற்கனவே ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கரன்படத்தின் நடித்த அனுபவத்திலும், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன்படத்தில் நடித்திருப்பதாலும் நயன்தாரா நோ சொல்லாமல் இப்படத்தினை டிக் அடிக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

இது தொடர்பான செய்திகள் :