நடிகர் அஜித் அவரது ரசிகர்களுக்கு கொடுத்த பொங்கல் விருந்து

Home

shadow

              சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விஸ்வாசம்.

இப்படம் உண்மையில் அவரது ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது..

தலையின் நடை, உடை, நடிப்பு என அனைத்தும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ரசிக்கும்படியாக உள்ளது

படத்தில் உள்ள வசனங்கள் பட்டையை கிளப்புகின்றன.. கிராமத்தில் அடாவடி செய்து வரும் இளைஞன் தூக்குதுரை (அஜித்குமார்) அதேசமயம் ஊர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நபராகவும் உள்ளார்.. இவரது மனைவி நிரஞ்சனா (நயன்தாரா) தூக்குதுரையின் அடாவடியால் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு பாம்பே சென்றுவிடுகிறார்.. 


10 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவிற்கு நிரஞ்சனா மற்றும் அவரது மகள் அனிகாவை அழைத்து வருமாறு தூக்குதுரையின் மாமா  மற்றும் குடும்பத்தினர்கள் கேட்கவே தனது மகள் மற்றும் மனைவியை அழைத்து வர பாம்பே செல்கிறார் அஜித்.. அங்கு சென்றதும் தனது மகள் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்துகொள்கிறார்..அதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை...


ரோபா ஷங்கர், தம்பிதுரை மற்றும் விவேக் ஆகியோரின் காமெடி படத்திற்கு பிளஸ்...


படத்தில் வரும் பாடல் காட்சிகளும் அனல் பறக்கும் சண்டைகளும் மேலும் படத்திற்கு வலுசேர்க்கின்றன...


நயன்தாரா மற்றும் அனிகா அவர்களுக்கான நடிப்பில் ஸ்கோர் செய்ய தவறவில்லை...


ஏறி மிதிச்சனுவை ஏரியா வாங்குறதில்ல  மூச்சகூட வாங்க முடியாது. மற்றும், தம்பிகளா அடிச்சி தூக்கலாம போன்ற பல வசங்கள் தியேட்டர்களில் விசில் பறக்க வைக்கின்றன....


எந்தவொரு இரட்டை அர்த்தங்களும் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் அமைந்துள்ளது விஸ்வாசம்..


ஒவ்வொரு காட்சிகளையும் ரசிக்கும்படி அமைத்துள்ளார் இயக்குனர் சிவா...


மொத்தத்தில் விஸ்வாசம் திரைப்படமானது  அஜித் ரசிகர்களுக்கு பொங்கலுக்கு முன்பே பொங்கல் கிடைத்தது போன்று....

இது தொடர்பான செய்திகள் :