நடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை

Home

shadow

பிகில் திரைப்பட வர்த்தகம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், பிப்ரவரி 5 ஆம் தேதி நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். மேலும், நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வாகனத்தில் சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் மாஸ்டர் திரைப்பட இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையை தொடர்ந்து இன்று நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே வைக்கப்பட்ட சீல்களை அகற்றிவிட்டு, ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு, விசாரணையை முடித்து திரும்பிச் சென்றனர்.

இது தொடர்பான செய்திகள் :